Enable Javscript for better performance
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 01st February 2019 07:15 AM  |   அ+அ அ-   |    |  

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித்தொழிலாளிக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
     விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மூர்த்தி (30), சிறுவனுக்கு இனிப்புகள் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரின் பேரில் சேத்தூர் போலீஸார் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மூர்த்தியைக் கைது செய்தனர். கடந்த 2013-இல் இச்சம்பவம் நடந்தது. இது தொடர்பான இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம்,  குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி மூர்த்தியை விடுதலை செய்து 2017 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. 
    இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து தங்கராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி" சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இல்லை, புகார் தாமதமாக கூறப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக மூர்த்தியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுபோன்ற தகாத குற்றங்களுக்கு நேரில் பார்த்த சாட்சியம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. ஒரு சாட்சி சம்பவ நாளில் பாதிக்கப்பட்ட சிறுவன்,  மூர்த்தியின் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்ததை பார்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆவணங்களையும், சாட்சியங்களையும் பார்க்கும்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மூர்த்திக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் முறையே இரு பிரிவுகளின் கீழ் முறையே 3 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூர்த்தி கூலித் தொழிலாளியாக இருப்பதால் இழப்பீடு வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதி,  மூர்த்தியை உடனடியாக சிறையில் அடைக்கவும்  உத்தரவிட்டார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp