இந்து மகா சபையை தடை செய்யக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd February 2019 07:52 AM | Last Updated : 02nd February 2019 07:52 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு இழிவுபடுத்திய இந்து மகாசபை தேசிய பொதுச் செயலர் பூஜா சஹானாவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் ஜியாவுதீன் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டச் செயலர் இத்ரீஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்டப் பொருளாளர் வழக்குரைஞர் யூசுப், தெற்கு தொகுதி தலைவர் அப்துல் ரஹ்மான், மத்திய தொகுதி தலைவர் ஆரீப்கான் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, வடக்குத் தொகுதி தலைவர் நாகூர் கனி வரவேற்றார்.