தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிசு
By DIN | Published On : 12th February 2019 07:51 AM | Last Updated : 12th February 2019 07:51 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் திங்கள்கிழமை பரிசு வழங்கினர்.
உசிலம்பட்டி - மதுரை பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், தலைக்கவசம் அணிந்து இருசக்கரம் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா பரிசு வழங்கினார்.
மேலும், "சீட்' பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது, தலை கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களிடம் தலைக்கவசம் அணியும் படி வலியுறுத்தப்பட்டது.
இதில், காவல் ஆய்வாளர் மாடசாமி,போக்குவரத்து சார்பு-ஆய்வாளர் முத்துராமன்
மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.