சுடச்சுட

    

    "போதைப் பழக்கம் இளஞ்சிறார்களை குற்றச் செயல்களுக்குத் தூண்டுகிறது'

    By DIN  |   Published on : 12th February 2019 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போதைப் பழக்கம் இளஞ்சிறார்களைக் குற்றச் செயல்களுக்குத் தூண்டுவதால், அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.
    போதைப் பழக்கத்தில் இருந்து இளஞ்சிறார்கள் விடுபடுவது குறித்த பயிற்சி முகாம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும்  மதுரை இளைஞர் நீதி குழுமம் 
    ஆகியன இணைந்து இப் பயிற்சியை நடத்தின. இதில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் பேசுகையில், இளம் சிறார்கள் போதைப் 
    பழக்கத்துக்கு அடிமையாவது வேதனைக்குரியது. 
    அதைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளைச் செய்யும் என்றார்.
    முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் தலைவர் ஆர்.காயத்ரி தேவி பேசுகையில், மதுரை மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் பதிவாகும் வழக்குகளில் 80 சதவீத வழக்குகள், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்பட்ட குற்றச் செயல்களாக இருக்கிறது. ஆகவே, போதைப்பழக்கம் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
    போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி, செல்லமுத்து அறக்கட்டளை பயிற்றுநர்கள் எடுத்துரைத்தனர். குழந்தைகள் பாதுகாப்பு 
    அலுவலர் அ.கணேசன், செல்லமுத்து அறக்கட்டளை திட்ட இயக்குநர் ஜனார்த்தனன் பாபு, ஒருங்கிணைப்பாளர் ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai