சுடச்சுட

  

  மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
  தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் 13-ஆவது மாநில அளவிலான  நீச்சல் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
   இப்போட்டிகளில் 551 புள்ளிகள் எடுத்த சென்னை டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 480 புள்ளிகள் பெற்ற மதுரை அணி 2-ஆம் இடத்தைப் பெற்றது.
  தனிநபர் பட்டம்  வென்றவர்கள்: பொதுப் பிரிவு ஆடவர் - எம்.எஸ்.பவன், பெண்கள் -  சிவதேஷா, இருவரும் சென்னை டால்பின் அணி.
  பிரிவு 1:  எல்.விகாஸ் (மதுரை),  அமுதவள்ளி மற்றும் பிரியங்கா (மதுரை). 
  பிரிவு 2: சாய்கணேஷ் மற்றும் ஜாஸு- திருநெல்வேலி, சேதுமதி - நெய்வேலி. 
  பிரிவு 3: ஆகாஷ்- சென்னை டால்பின், தனுஷா -திருச்சி.
  பிரிவு 4: யஸ்வந்த்,  ரோஷினி- மதுரை.
  பிரிவு 5: அருண் -நெல்லை,  பிறைமதி- சென்னை.
  பிரிவு 6: கபிலன், வினியா -சேலம்.  
  பிரிவு 7: மரிய ஜோஷ் - திருநெல்வேலி மற்றும் அப்துல்ல்லா - சென்னை,  அஸ்விதா-சேலம்.
  பிரிவு 8: ஜாஸ்வின் -திருநெல்வேலி, ரேசெல் -சென்னை.
  வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு நீச்சல் சங்கத் துணைத் தலைவர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாநில  பொருளாளர் முரளிதரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai