சுடச்சுட

  

  மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
  சேடப்பட்டி காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் மாயன்(52). இவர் திங்கள்கிழமை இரவு காவல்நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது காளப்பன்பட்டி கிராமத்தில் பிரச்னை இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து மற்றொரு காவலருடன் இருசக்கர வாகனத்தில் காளப்பன்பட்டிக்கு சென்றார். 
  அங்கு பிரச்னை தொடர்பாக விசாரித்து விட்டு சின்னக்கட்டளை வழியாக காவல்நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் சின்னக்கட்டளை அருகே வந்தபோது சாலையில்  சந்தேகத்துக்கிடமாக இருவர் நின்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த மாயன் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரையும் விசாரித்து விட்டு அவர்களை சோதனையிட முயன்றார். 
  அப்போது அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயனின் தோளில் குத்திவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.
  இதில் பலத்த காயமடைந்த மாயன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக மாயன் அளித்தப் புகாரின்பேரில் சேடப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai