சுடச்சுட

    

    மதுரை மாநகராட்சி 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கு நாளை சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 13th February 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சியின் 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் சிங்கராயர் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
     வார்டு 41 நரிமேடு, வார்டு 42 சொக்கிக்குளம், வார்டு 43 தல்லாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் பெறுவது, புதுப்பித்தல், தொழில் வரி விதிப்பு ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உடனுக்குடன் உத்தரவுகளைப் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai