பொருளாதாரமும் கணிதமும் இணைந்த புதிய பாடத் திட்டம் விரைவில் அறிமுகம்: துணைவேந்தர் தகவல்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர்கள் அனைவருக்கும் பொருளாதாரமும் கணிதமும் சேர்ந்த புதிய பாடத் திட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர்கள் அனைவருக்கும் பொருளாதாரமும் கணிதமும் சேர்ந்த புதிய பாடத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார். 
பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினம் மற்றும் பொன்விழா மலர் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவர் நா.தியாகராஜன் தலைமை வகித்தார். விழாவில் பொன்விழா மலரை வெளியிட்டு துணைவேந்தர் பேசியது:  வீட்டில் 70 வயதுக்கு மேல் முதியோர் இருந்தால் கடவுள் உங்கள் வீட்டில் குடியிருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அனுபவம் நமக்கு மிகவும் தேவையானது. நமது ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளால்தான் 8 சதவீதமாக இருந்த பெண் கல்வி தற்போது 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இனிமேல் மாணவர்கள் யாரும் கணிதம் மற்றும் பொருளாதாரம் படிக்காமல் இருக்கக் கூடாது என புது விதிகளை உருவாக்கி வருகிறோம். இது வரும் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியாதவர் கல்வி கற்றவர் அல்ல என்ற நிலை விரைவில் வர உள்ளது. காமராஜர் பல்கலைக் கழகம் உங்களுக்கு பணிசெய்ய  காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.  நிகழ்ச்சியில் முன்னதாக கல்லூரி முதல்வர் மு.கண்ணன் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர்  மரியஜோசப் சேவியர், துணை முதல்வர் கே.கிருஷ்ணன், பேராசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com