பிஎஸ்என்எல்-க்கு எதிரான மத்திய அரசின் பிரசாரத்தை முறியடிக்கவே வேலைநிறுத்தம்: ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருவதாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள  பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கவே

பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருவதாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள  பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கவே பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஜி.செல்வின் சத்தியராஜ் (பிஎஸ்என்எல்யு), ஜி.ராஜேந்திரன் (என்எப்டிஇ). ஏ.அகமதுயூனுஸ் (எஸ்என்இஏ), ஏ.அருணாச்சலம் (ஏஐபிஎஸ்என்எல்இஏ), ஜி.அன்பழகன் (டிஇபியு) ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வருவது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை  மத்திய அரசு உருவாக்கி மக்கள்  மத்தியில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைத்து சங்கங்கள் ஓரணியில் திரண்டுள்ளோம். அரசுத்துறை, தனியார்துறைகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி, இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல் நிறுவன சேவைகளையே பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தச் சூழலில், பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான தொலைத் தொடர்பு கோபுரங்களை பராமரிக்க அயல் ஒப்பந்த முறையை மத்திய அரசு கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான உத்தரவாதத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். இரண்டாவது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பரிந்துரையை அமலாக்க வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியப் பங்களிப்பைப் பெறவேண்டும். 
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4-ஜி அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதன் மூலம் தான் ஊழியர்களின் எதிர்காலமும், பிஎஸ்என்எல்-இன் எதிர்காலமும் உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com