Enable Javscript for better performance
எல்லைப் பகுதியில் அசாதாரண சூழல்: மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    எல்லைப் பகுதியில் அசாதாரண சூழல்: மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

    By DIN  |   Published On : 28th February 2019 08:19 AM  |   Last Updated : 28th February 2019 08:19 AM  |  அ+அ அ-  |  

    இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மதுரை விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை, பாகிஸ்தான் பகுதியில் பாலாகோட் உள்ளிட்ட 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பதிலடி தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  
    இதனால் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தவோ அல்லது பயங்கரவாதிகள் இந்தியப் பகுதிகளில் குறிப்பாக விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
    விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    குறிப்பாக, விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்ப வேண்டும்.
    விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.  விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
    விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம்,  உணவு விடுதிகள், கடைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும். 
    மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், அனைத்துப் பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். 
    சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையத்திலும் புதன்கிழமை மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  
    கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் தடுப்பு சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்குப் பின்னர், மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp