முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை
By DIN | Published On : 28th February 2019 08:12 AM | Last Updated : 28th February 2019 08:12 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவர் புதன்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்த குமார் மகன் யுகேஷ் (21). இவர், இப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். போத்தம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மனைவி இந்திரா (31). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யுகேஷும், இந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருவாரத்துக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளையராஜா தம்பி ராம்பாபு, தனது அண்ணன் மனைவி இந்திராவையும், குழந்தைகளையும், காணவில்லை என உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், யுகேஷிடமும், இந்திராவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் திருமணம் செய்து கொள்கிறோம் எனக் கூறி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு யுகேஷ், கருமாத்தூரில் உள்ள அவரது வீட்டு வாசலில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை மீட்டு செக்கானூரணியில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யுகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் இது குறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.