முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணை ஏப்.10-க்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 28th February 2019 08:11 AM | Last Updated : 28th February 2019 08:11 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பான 29 வழக்குகள் மீதான விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மேலூர் நீதித்துறை நடுவர்மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் தனியார் நிலங்களில் முறைகேடாக கிரானைட் கற்களை பதுக்கி வைத்துள்ளது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடுத்துள்ள 29 வழக்குகளும், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது போலீஸார் தொடுத்துள்ள 10 வழக்குகளும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. இவை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. திருவாதவூரில் சட்டவிரோத கிரனைட் கற்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக துணை வட்டாட்சியர் பிரேம்கிஷோர் ஆஜராகி சாட்சியமளித்தார். அரசு சிறப்பு வழக்குரைஞர் ஷீலாவும் வழக்கு விசாரணையின்போது ஆஜரானார்.