முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.74.88 லட்சம்
By DIN | Published On : 28th February 2019 08:18 AM | Last Updated : 28th February 2019 08:18 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.74. 88 லட்சம் ரொக்கம் மற்றும் 705 கிராம் தங்கம் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பக்தர்கள் ரூ.74 லட்சத்து 88 ஆயிரத்து 667 ரொக்கம், 705.940 கிராம் தங்கம், 1.234 கிலோ வெள்ளி மற்றும் 420 வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.