வேங்கடரமண பாகவத சேவா சமாஜம் சார்பில்இசைக் கலைஞர்களுக்கு விருது

மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வேங்கடரமண பாகவதர் ஜயந்தி இசை விழாவில் இசைக் கலைஞர்கள் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய வேங்கடரமண பாகவதர் ஜயந்தி இசை விழாவில் இசைக் கலைஞர்கள் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சீடரான ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதரின் 238-ஆவது ஜயந்தி  இசை விழா மதுரை செளராஷ்டிரா சபை அரங்கில் தொடங்கியது. மதுரை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் இசைக் கலைஞர்கள், சாதனையாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
  இசைக் கலைஞர்கள்  த.லட்சுமணராஜ் (மிருதங்கம்), ஷோபனா விஜயகுமார் (வீணை), சச்சிதானந்தம் (வயலின்) ஆகியோருக்கு விருதுகளை நல்லி குப்புசாமி செட்டியார் வழங்கினார்.  மேலும், வேங்கடரமண பாகவதரின் இசைப்பணி குறித்து பல்வேறு மேடைகளிலும் சொற்பொழிவு ஆற்றிய பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.ஜீவன்லால், ஈரோடு கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் பாராட்டு பெற்றனர்.  பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியனுக்குப் பதிலாக அவரது சகோதரர்  தா.கு. சௌந்தரராஜன் பாராட்டுச் சான்று பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார் பேசியது:
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு திருவையாற்றில் ஆராதனை விழா நடைபெறுவதைப் போல மதுரையில் வேங்கடரமண பாகவதருக்கு ஜயந்தி இசை விழா நடத்துவது பாராட்டுக்குரியது. 
இசைக்கு அவர் ஆற்றிய பணிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியம். மதுரையில் நடைபெறும் இந்த விழாவைப் போல, தமிழகம் முழுவதும் அவரது இசைப் பணியைக் கொண்டு சேர்ப்பது அவசியம். குறிப்பாக, சென்னையில் வேங்கடரமண பாகவதருக்கு விழா எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
சமாஜம் தலைவர் கே.ஆர்.சாந்தாராம், செயலர் டி.கே.ரவீந்திரநாத்,  முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com