உசிலை அருகே ஜல்லிக்கட்டு ஒத்திகை காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 07th January 2019 08:19 AM | Last Updated : 07th January 2019 08:19 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு ஒத்திகைக்கான பயிற்சியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.
உசிலம்பட்டி வட்டம் பண்ணைப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதியிலுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம், பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
அதற்கான ஒத்திகைப் பயிற்சியில் பண்ணைப்பட்டி, வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, போத்தம்பட்டி, மலைப்பட்டி, குருவிளாம்பட்டி, கல்யாணிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து காளை
களும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியில் மாதிரி வாடிவாசல் உருவாக்கப்பட்டு காளைகள் ஓடி விடாதவாறு, நீண்ட கயிறுகளால் கட்டி அவிழ்த்து விடப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பார்த்தனர்.