Enable Javscript for better performance
அரசு கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு- Dinamani

சுடச்சுட

    

    அரசு கேபிள் டிவி கட்டண உயர்வுக்கு தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

    By DIN  |   Published on : 08th January 2019 08:46 AM  |   அ+அ அ-   |    |  

    அரசு கேபிள் டிவி கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
     இதுதொடர்பாக கரூர், நரிக்கட்டியூரைச் சேர்ந்த சரவணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:  தமிழகத்தில் செட்டாப் பாக்ஸுடன் தற்போது 49 கட்டணச் சேனல்கள் உள்பட 207 சேனல்கள் மாதம் ரூ. 150-க்கும், 142 கட்டணச் சேனல்கள் உள்பட 300 சேனல்கள் மாதம் ரூ. 210 கட்டணத்துக்கும் வழங்கப்பட்டுவந்தது. இந்த கட்டணத்தை முறையே ரூ. 350, ரூ. 500ஆக உயர்த்தியுள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை 2017-இல் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்நிறுவனங்கள் சட்டத்துக்கு மேற்பட்டவர்களாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். இதனால் தொலைக்காட்சி சேனல்களுக்கு மாதக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொலைத்தொடர்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். அதுவரை புதிய கேபிள் கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்  எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
     வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய தகவல்தொடர்புத் துறைச் செயலர், தகவல் ஒளிபரப்புத் துறை செயலர், டிராய் தலைவர், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜன. 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp