Enable Javscript for better performance
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலர் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 08th January 2019 08:49 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுகாதாரத் துறைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
     மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
     இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத் துறைச் செயலர் தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 16 இல் நடைபெற்ற கூட்டத்தின் "மினிட்ஸ்' குறிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
      மேலும், பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட  குழு சட்டப்பூர்வமானது இல்லை எனவும், அரசின் கொள்கை ரீதியான முடிவு. அதில் கால நிர்ணயம் வகுக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டது. சுகாதாரத்துறைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என தெரிவிக்கப்பட்டதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு (ஜன. 10)  ஒத்திவைத்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp