சுடச்சுட

  

  நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 12th January 2019 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மாவட்டம் மாங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள்,  விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை மாவட்டம் மாங்குளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால், மனு மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மாங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கவும், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல், வியாபாரிகளிடம் கொள்முதல் செய்வதை நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒத்தக்கடை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் கிழக்கு தாலுகாத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலர் மு.பாலுச்சாமி,  தாலுகாச் செயலர் காசிராஜன். சாமிக்கண்ணு  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலர் எம்.கலைச்செல்வன், விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.  கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, விவசாயிகள் சங்க தாலுகாச் செயலர் கே.சேகர், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் மச்சராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai