சுடச்சுட

  

  பாரத சாரணர் இயக்கத்தின் உசிலம்பட்டி கல்வி மாவட்ட நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
  உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியர் பொதுக்குழுக் கூட்டம் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருமாத்தூர் கிளாரட் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எ.சூசை மாணிக்கம் தலைமை வகித்தார். சாரணர் இயக்கத்தின் மாவட்ட முதன்மை ஆணையர் எம்.முத்தையா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட அமைப்பு ஆணையர் எம்.ஜான் கோயில் பிள்ளை செயற்குழு தீர்மானங்களை சமர்ப்பித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
  அதைத் தொடர்ந்து, சாரணர் இயக்கத்தின் உசிலம்பட்டி கல்வி மாவட்டத் தலைவராக உசிலம்பட்டி துர்கா உணவக உரிமையாளர் எஸ்.அய்யனார், ஆணையராக எம்.ஜான்கோயில்பிள்ளை, உதவி ஆணையராக அனந்தராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சாரணர் இயக்க மாவட்டச் செயலர் எம்.ஜெகதீசன் வரவேற்றார். டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரேஸ்சந்திரா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai