சுடச்சுட

  


  உசிலம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரைக் கண்டித்து, பார்வார்ட் பிளாக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  எழுமலை அருகேயுள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் ஏற்கெனவே இருந்த பார்வர்ட் பிளாக் கட்சி கொடிக் கம்பத்தில், சில தினங்களுக்கு முன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் தலைமையில், அக்கட்சி கொடியேற்றப்பட்டது.
  இது குறித்து துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி அளித்த புகாரின்பேரில், எம்.கல்லுப்பட்டி போலீஸார் பி.வி. கதிரவன், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் டி.கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
  எம்.கல்லுப்பட்டி போலீஸார் பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், அதற்கு உறுதுணையாக செயல்படும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஐ. ராஜா, டி.கிருஷ்ணாபுரம் உறவின்முறைத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம், துணைத் தலைவர் திருப்பூர் கர்ணன், மாநிலச் செயலர்கள் பசும்பொன், பாஸ்கர பாண்டியன், மாவட்டச் செயலர்கள் அய்யப்பன், ஆதிசேடன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, வழக்குரைஞர் பிரிவு செயலர் ரெட் காசி வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai