சுடச்சுட

  


  பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  கல்லூரி மகளிர் மேம்பாட்டுக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ். நேரு தலைமை வகித்தார். செயலர் எம். விஜயராகவன், தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நொபிலி மறைப்பணி மைய ஒருங்கிணைப்பு செயலர் அருள், வக்ஃபு வாரிய கல்லூரி பேராசிரியர் கா. சாகுல்ஹமீது ஆகியோர் பேசினர். மேலும், மதுரை பத்ரிகா ஆசிரம துவாரகா பீடம் தவத்திரு சாந்திகுமார சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  முன்னதாக, கல்லூரி வளாகத்தில் துறைவாரியாக மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பேராசிரியர் சீ. காயத்திரிதேவி வரவேற்றார். தமிழ் துறை தலைவர் தி. மல்லிகா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai