சுடச்சுட

  


  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்தூரில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் விவசாயிகளுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
  இக் கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர் பா. நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  இதில், விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதையடுத்து, இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற நீடித்த நிலையான வேளாண்மை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
  நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் குமாரவடிவேலு, துணை இயக்குநர்கள் மத்திய திட்டம் விஜயலட்சுமி, மாநில திட்டம் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தம்மாள், வேளாண்மை உதவி இயக்குநர் சுமதி உள்பட அதிகாரிகள் மற்றும் அதிமுக ஒன்றியச் செயலர் ராஜா, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பண்பாளன், ஒன்றியப் பேரவை மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன், உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள உள்நோயாளிகள், வெளிநோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும், சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர், உசிலம்பட்டி நுகர்வோர் வாணிபக் கிட்டங்கியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ள நெல், பயறு வகைகளின் மூட்டைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai