சுடச்சுட

  


  அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் பிளாஸ்டிக் கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. 
  சிந்தாமணி பகுதியில் விஜயராஜ் என்பவருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் கிடங்கு உள்ளது. இங்கு, சனிக்கிழமை பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து திடீர் நகர், அனுப்பானடி பகுதியிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஏராளமான பழைய பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன என்றும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai