எம்ஜிஆர் 102 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு அதிமுக, அமமுகவினர் மரியாதை

அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு

அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் வியாழக்கிழமை எம்ஜிஆர் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்  திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலர் எம்.ரமேஷ், கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் நிலையூர் முருகன், மன்றச் செயலர் ஓம்.கே.சந்திரன், ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதிச் செயலர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்டச் செயலர் பாரி,   வட்டச் செயலர் பொன்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.    இதேபோல, திருநகர் 2 ஆவது பஸ் நிறுத்தம், மகா லெட்சுமி காலனி ஆகிய பகுதிகளில் வட்டச் செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பகுதி இணைச் செயலர் சாந்தி, மாணவரணி பகுதிச் செயலர் சசிகுமார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
மேலூர்: மேலூர் செக்கடி பஜாரில் அதிமுக மேலூர் ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் துரைப்பாண்டிஎன்ற பெரியசாமி, ஜபார், வெற்றிச்செழியன், மணிகண்டன் உள்ளிட்ட  அதிமுகவினர்  எம்ஜிஆர் உருவப்படத்துக்கு  மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
   அமமுக சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்ட  எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மதுரை வடக்கு மாவட்டச்செயலர் செய சரவணன், மாநில துணைச் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
 உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சட்டப் பேரவை உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நகரச் செயலர் பூமா கே.ஆர்.ராஜா உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
     உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள முருகன் கோயில் முன்பாக அமமுக மாவட்டச் செயலர் இ.மகேந்திரன் தலைமை வகித்து எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  நகரச் செயலர் குணசேகரபாண்டியன், ஒன்றியச் செயலர் சேதுராமன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எ.கே.டி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com