உசிலம்பட்டியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
By DIN | Published On : 29th January 2019 05:45 AM | Last Updated : 29th January 2019 05:45 AM | அ+அ அ- |

உசிலம்பட்டியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உசிலம்பட்டி பகுதிகளில் காவல் சார்பு -ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்தலகுண்டு சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த அல்லிக்கொடி (42) என்பதும், அவரிடம் இருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.
அதையடுத்து அல்லிக்கொடி மீது போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.