புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள்கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 29th January 2019 05:48 AM | Last Updated : 29th January 2019 05:48 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்லம் தலைமை வகித்தார். இணை செயலர் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை பட்டியலின பிரிவிலிருந்து நீக்க வேண்டும், சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், திருமங்கலம் எம்எல்ஏ ஆண்டிச்செல்வம், நிர்வாகிகள் கிருஷ்ணன், அய்யர், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.