சுடச்சுட

  

  மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை ஆட்சியர் த.சு.ராஜசேகர் திங்கள்கிழமை வழங்கினார்.
  மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற த.சு.ராஜசேகர்,  மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முதலில் மாற்றுத் திறனாளிகள் அமர்ந்திருந்த பகுதியில் மனுக்களைப் பெற்ற அவர், முதல் முறை வருகிறீர்களா அல்லது ஏற்கெனவே மனு அளித்தீர்களா எனக் கேட்டு மனுவில் குறிப்பு எடுத்துக் கொண்டார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
  அடிப்படை வசதிகள், சாலைகள் சீரமைப்பு, அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம்,  மின்வசதி, முதியோர் உதவி, ஆதரவற்றோர் உதவி, மாற்றுத் திறனாளிகள் உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மொத்தம் 611 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
  மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) எஸ்.சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.பஞ்சவர்ணம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கே.பி. பிரம்மநாயகம், ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலெட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai