சுடச்சுட

  

  ரகசிய தகவலுக்கு "வாட்ஸ் அப்' எண்: மதுரை மாநகர் ஆணையர் தகவல்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மாநகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார்களை ரகசியமாக தெரிவிக்க புதிய கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாநகர பொதுமக்களின் நலன் கருதியும், குற்றமில்லா மாநகராக மதுரையை மாற்றுவதற்காகவும் புதிய செல்லிடப்பேசி எண் (98438-79999)  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு  கட்செவி அஞ்சல் வசதி உள்ளது. 
  பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இதன் மூலமாக  மதுரை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை,  சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ மற்றும் ஆடியோக்கள் மூலமாக தகவல்களை அனுப்பலாம். 
  பொதுமக்களால் அனுப்பப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் காவல் ஆணையருக்கு நேரடியாக சென்றடைவதால், விவரங்கள் மற்றும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். 
  எனவே, குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை பொதுமக்கள் அனைவரும்  எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி தெரிவித்து மதுரை மாநகரத்தை குற்றமில்லாத மாநகரமாக மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai