திருமோகூர் கோயிலில் சக்கரத்தாழ்வார் அவதார விழா
By DIN | Published On : 05th July 2019 09:56 AM | Last Updated : 05th July 2019 09:56 AM | அ+அ அ- |

யானைமலை ஒத்தக்கடை அருகிலுள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் சுதர்சன சக்கரத்தாழ்வார் அவதார திருநட்சத்திர விழா ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது என, கோயில் நிர்வாக அதிகாரி எஸ். ஜெயதேவி தெரிவித்துள்ளார்.
திருமோகூரில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் திருக்கோயில் மருதுபாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சுதர்சன சக்கரத்தாழ்வார் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. சக்கரத்தாழ்வார் அவதார திருநட்சத்திர தினம் ஜூலை 10 ஆம் தேதி வருகிறது.
இதையொட்டி, சுதர்சன சக்கரத்தாழ்வார் சன்னிதியில் சுதர்சன ஹோமம், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறவுள்ளன. பக்தர்கள் திரளாகப் பங்கேற்று, ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்கலாம் என நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.