மேலூரில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 05th July 2019 09:57 AM | Last Updated : 05th July 2019 09:57 AM | அ+அ அ- |

மேலூரில் பெண்ணிடமிருந்து 9 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவர் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் தப்பிவிட்டனர்.
செக்கடி பஜார் அருகிலுள்ள செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (65). இவர், புதன்கிழமை பிற்பகலில் வீட்டின் முன்பாக நின்றிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல், திடீரென அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.