சுடச்சுட

  

  மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
  பள்ளித் தாளாளர் முகமது இத்ரிஸ் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியரும் நாட்டு நலப்பணித்திட்ட தலைவருமான ஷேக் நபி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். ஊர்வலத்தில் உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், ரகமத்துல்லா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நூருல்லா, காதர், அமித் ஆகியோர் பங்கேற்றனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து தொடங்கி மூன்றுமாவடி பேருந்து நிறுத்தம் மற்றும் கோ.புதூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai