சுடச்சுட

  

  மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வில் 4 பேருக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
  மதுரை மாவட்ட கல்வித்துறை பணி நிரவல், பதவி உயர்வு, இடமாற்ற கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பணி நிரவல் கலந்தாய்வும், வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வும் நடைபெற்றது. மேலும் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கான அரசு, நகராட்சிப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலும் நடைபெற்றது. இதில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி கணக்கிடப்பட்டு கூடுதலாக இருந்த 4 ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு பணியமர்த்தப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai