சுடச்சுட

  

  வெள்ளலூர் அருகே மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் மீன் வியாபாரி பலி

  By DIN  |   Published on : 11th July 2019 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேலூர் அருகேயுள்ள மட்டங்கிபட்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீன் வியாபாரி    உயிரிழந்தார்.
  மேலூர் அருகேயுள்ள மட்டங்கிபட்டிமந்தைக் கருப்பணசுவாமிகோயில் ஆனி உற்சவத்தையொட்டி மஞ்சிவிரட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  இதில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் திறந்த வெளியில் ஓடியதில் கூட்டத்தினர் நின்ற பகுதிக்குள்ளும் புகுந்தன. 
  இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீழையூரைச் சேர்ந்த மீன் வியாபாரி பழனி (53) காளை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.
  மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்,  சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் அலவாக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் (50) உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து கீழவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai