நுண்ணீர் பாசனத் திட்டம்:  மதுரை மாவட்டத்துக்கு ரூ.30.25 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்துக்கு ரூ.30.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்துக்கு ரூ.30.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: குறைந்து வரும் நீர் இருப்பைக் கொண்டு அதிக பயிர் சாகுபடி செய்வதை இலக்காகக் கொண்டு பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி,  நிகழ் ஆண்டுக்கு ரூ.18.95 கோடி மற்றும் முந்தைய ஆண்டின் எஞ்சிய நிதி ரூ.11.30 கோடி என ரூ.30.25 கோடி நிதி இத் திட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சொட்டுநீர், தெளிப்பு நீர், மழைத் தூவுவான் ஆகியன அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.  நுண்ணீர் பாசனத் திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறுகிறது.
 மதுரை கிழக்கு - நரசிங்கம், மதுரை மேற்கு - சமயநல்லூர், திருப்பரங்குன்றம் - சோழங்குருணி, மேலூர் - தெற்குத்தெரு, கொட்டாம்பட்டி - கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி - கச்சைகட்டி, அலங்காநல்லூர் - எண்: 66 மேட்டுப்பட்டி, திருமங்கலம் - சாத்தங்குடி, கள்ளிக்குடி  - தூம்பக்குளம், தே.கல்லுப்பட்டி - தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி - தொட்டப்பநாயக்கனூர், செல்லம்பட்டி - செல்லம்பட்டி, சேடப்பட்டி - எழுமலை ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
இதில் வேளாண் துறையினருடன் வருவாய்த் துறையினரும் கலந்து கொள்ள உள்ளனர். முகாமின்போதே நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விண்ணப்பிக்க, சிறுவிவசாயி சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com