சுடச்சுட

  

  மதுரையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சிறப்புக் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
  மதுரை அண்ணாநகரில் உள்ள ஸ்பார்க்ஸ் வித்யாலயா சிறப்புப்பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான உலக மக்கள்தொகை விழிப்புணர்வு ஓவியப்போட்டி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் அதன் காரணமாக ஏற்படும் புவி நிலை மாற்றம் எனும் தலைப்பில் சிறப்புக்குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரைந்தனர். போட்டியின் முடிவில் சிறப்பான ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவில் பள்ளி முதல்வர் ஆண்டவர் ஜெயதேவ் சிறப்புக் குழந்தைகள் பெருக்கம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதையும், இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சிறப்புக்குழந்தைகளின் பெருக்கத்தை விழிப்புணர்வு மூலமே சரிசெய்ய முடியும் என்றும் உரையாற்றினார். 
  ஓவியப் போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த சிறப்புக்குழந்தைகள் 23 பேர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai