மதுரை நகரில் ஜூலை 15-இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மதுரை மாநகராட்சி குடிநீர் விநியோக குழாயில் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் மதுரை நகரில் திங்கள்கிழமை (ஜூலை 15) குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம்

மதுரை மாநகராட்சி குடிநீர் விநியோக குழாயில் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் மதுரை நகரில் திங்கள்கிழமை (ஜூலை 15) குடிநீர் விநியோகம் தடை செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழாய் உடைப்பு மற்றும் நீர்க்கசிவு சரிசெய்யும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளன. இதனால் 21-ஆவது வார்டு கோச்சடை, பெத்தானியாபுரம், முத்துநகர், பூஞ்சோலை நகர், டோக் நகர், நடராஜ் நகர், அண்ணா பிரதான வீதி, மேட்டுத்தெரு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், ஐஎன்டியூசி காலனி. 
 79, 80, 81 மற்றும் 83-ஆவது வார்டு ஞாயிற்றுக்கிழமை சந்தை மேல்நிலைத்தொட்டி, மேலமாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம் தெரு, டிவி லேன், மேலபெருமாள் மேஸ்திரி வீதி, காக்காத்தோப்பு, குட்ஷெட் தெரு, நாடார் சந்து, அக்ரஹாரம் மணி ஐயர் தெரு, ஸ்காட் சாலை, மணி நகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை பகுதிகள்.
தமிழ்ச்சங்கம் மேல்நிலைத்தொட்டி பகிர்மான பகுதிகள்,  வடக்கு மாசி வீதி, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு,  மேல ஆவணி மூல வீதி, தாசில்தார்  பள்ளிவாசல் தெரு, எம்.எம்.சி காலனி, கோவிந்தன் செட்டி தெரு, ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம்,  அனுமார் கோவில் படித்துறை, திருமலைராயர் படித்துறை, தைக்கால் 1,2,3,4,5 தெருக்கள், கீழப்பட்டமார் தெரு. வார்டு எண் 65, 66,78, 85 மற்றும் 86 இல் பெரியார் பேருந்து நிலையம், திடீர் நகர், மேலவாசல், பெருமாள் கோவில் கட்றாப்பாளையம்,  நேதாஜி சாலை, காஜிமார் தெரு, குப்புப்பிள்ளைத் தோப்பு, பாண்டிய வேளாளர் தெரு, பள்ளிக்கூட தெரு, மீனாட்சி தியேட்டர் பகுதி, எப்.எப்.சாலை, மேலமாசி வீதி, தெற்காவணி மூல வீதி பகுதிகள்.  வார்டு எண் 87, 88, 89 டி.பி டேங்க் 2-ஆவது பகிர்மானம், சுப்ரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்துபுரம் 1-ஆவது தெரு, 2-ஆவது பிரதான சாலை, செட்டியூரணி, எம்.சி.சி.குடியிருப்பு, எம்.கே.புரம் பிரதான சாலை. வார்டு எண் 22 கோச்சடை 3-ஆவது பகிர்மானம், சம்மட்டிபுரம், எம்.எம்.நகர், வெள்ளைக்கண்ணு தியேட்டர் நகர், சொக்கலிங்க நகர் ஆகிய பகுதிகளில்  வரும் திங்கள்கிழமை(ஜூலை 15)  குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று மநாகராட்சி ஆணையர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com