மீன்வளத் துறை ஆய்வக பணியிடங்கள் ஜூலை 19 இல் நேர்காணல்

மீன்வளத் துறையின் நீர்வாழ் உயிரின ஆய்வகத்தில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கு ஜூலை 19-இல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையின் நீர்வாழ் உயிரின ஆய்வகத்தில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கு ஜூலை 19-இல் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமையவுள்ள நீர்வாழ் உயிரின ஆய்வகத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்பவியலாளர் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர் இருவர், ஆய்வக உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தொழில்நுட்பவியலாளர் பணிக்கு கடல்வாழ் உயிரியல், மீன்வள அறிவியல், நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆய்வகத் தொழில்நுட்பவியல் அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இரு பணியிடங்களுக்கும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 24 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம். மற்றவர்கள் 24 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
இதுதொடர்பான விவரங்களுக்கு மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்: 0452-2347200.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com