சுடச்சுட

  

  பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

  By DIN  |   Published on : 14th July 2019 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மதுரை பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  மதுரை மாநகரம் பொலிவுறு நகராக அறிவிக்கப்பட்டதால், மாநகரின் பல்வேறு பகுதிகள் நவீனமயமாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில், பெரியார் பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு, நவீன பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பெரியார் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதிகளில்  தற்காலிகமாக அரசுப் பேருநந்துகள் நிறுத்தப்படுகின்றன. 
  இதனால், பெரியார் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, சாலையில் கேபிள் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரித்து, வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.  இந்நிலையில், திருப்பரங்குன்றம் சாலையில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, அச் சாலையில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, சீரமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியுள்ளன. இதனால், பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் சாலை, எல்லீஸ் நகர் சாலை, மேலவெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. பெரியார் பேருந்து நிலையத்தை கடந்து செல்ல 15 நிமிடங்களுக்கு மேலானதால், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகினர். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இரவு 10 மணி வரை நீடித்தது. 
  பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை விரைந்து மூடவேண்டும், பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai