சுடச்சுட

    


    மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 54 மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
    ஹை-டெக் அராய் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.டி. பங்கேரா,  மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார். மங்கையர்க்கரசி கல்வி குழுமத்தின் செயலர் பி. அசோக்குமார், இயக்குநர் ஏ. சக்தி பிரனேஷ், முதல்வர் ஜெ. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்-எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், கல்லூரி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 
    அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி மொத்தம் 54 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வர் ஜெ. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai