Enable Javscript for better performance
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் எத்தனை: "டாஸ்மாக்' மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீ- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் எத்தனை: "டாஸ்மாக்' மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு  

    By DIN  |   Published On : 23rd July 2019 08:30 AM  |   Last Updated : 23rd July 2019 08:30 AM  |  அ+அ அ-  |  

    மதுரை மாவட்டத்தில் எத்தனை அரசு மதுபானக்(டாஸ்மாக்) கடைகள் உள்ளன, எத்தனை சட்டவிரோத மதுபானக் கூடங்கள் உள்ளன என்பன குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    மதுரையைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: 
    நான் மதுரை அருகே நாயக்கன்பட்டியில் எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக உள்ளேன். எங்கள் கல்லூரியில் போதை மறு வாழ்வு மையமும் செயல்படுகிறது. மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். கல்லூரியில் 1,025 மாணவர்கள் 130 மாணவிகள் பயில்கின்றனர். இதில் 120 மாணவர்கள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். இந்நிலையில், கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் அருகே  மதுபானக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை பழக்கத்தில் உள்ளவர்களை மீட்பவர்களுக்கான மறுவாழ்வு மையம் அருகே மதுபானக் கடை திறப்பது சரியானது அல்ல. இது சிகிச்சையில் உள்ளவர்களை மட்டுமல்லாது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாதிக்கும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகே மதுபானக் கடை, மதுபானக் கூடம் திறக்க தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
    இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மதுபானக் கடை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என  உத்தரவிட்டனர்.
    மேலும், மதுரை மாவட்டத்தில் எத்தனை அரசு மதுபானக் கடைகள் உள்ளன? எத்தனை சட்டவிரோத மதுபானக் கூடங்கள் உள்ளன? மதுபோதையில் உள்ளவர்களால் ஏற்படும் தொல்லைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் சுகாதாரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பன தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp