Enable Javscript for better performance
அரசு மதுபானக் கடையில் திருடிய 4  பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அழகர்கோவில் அருகிலுள்ள வல்லாளபட்டி அரசு மதுபானக் கடையில் மதுபாட்டில்கள் மற்றும் பணம்  திருடிய 4  பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    வல்லாளப்பட்டி மதுபானக் கடையில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு சிலர் மதுபானக் கடை பூட்டை உடைத்து, 125  மதுபாட்டில்கள் மற்றும்  ரூ.1000-த்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக மேலூர் காவல் ஆய்வாளர் தெய்வீகபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
    இந்த வழக்கில் போலீஸார் தெற்குத் தெருவைச் சேர்ந்த பெரியநாயக் என்ற பெரியமருது (51), பூபதிராஜா (31), காரைக்குடியைச் சேர்ந்த பிரகாஷ் (34) சிவக்குமார் (33) ஆகியோரைக் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து  
    ரூ.5,000-ஐ கைப்பற்றினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai