Enable Javscript for better performance
இளம் பெண் பலாத்காரம்:  இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இளம் பெண் பலாத்காரம்:  இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

    By DIN  |   Published on : 25th July 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
      மதுரை பாக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார்(24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த  பிளஸ் 2 படித்து விட்டு வீட்டிலிருந்த 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதில் அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.  இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நிதீஷ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai