Enable Javscript for better performance
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின்15 ஆவது ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பார் அசோசியேஷன் (எம்எம்பிஏ) சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் 15 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
    இதில் பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இளைய தலைமுறையினர் பெரியவர்களுக்கும், தொழில்முறையில் மூத்தவர்களுக்கும் மரியாதை அளிப்பதை கடைபிடிக்க வேண்டும். 
     இப்போதுள்ள இளம் வழக்குரைஞர் வழக்கு கட்டுகளைக் கூட வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு மேலும் ஒரு அறிவுரையை கூற விரும்புகிறேன். அவர்கள் கையாளும் வழக்கில் தொடர்புடையை தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். 
    அப்போது தான் நீதிமன்றத்தில் வாதிடுகையில் தேவையானவற்றை தவறாமல் குறிப்பிட முடியும், என்றார். 
    இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி மற்றும் மூத்த வழக்குரைஞர் பங்கேற்றனர். 
     எம்எம்பிஏ தலைவர் என்.கிருஷ்ணவேணி, பொதுச் செயலர் என்.இளங்கோ விழா ஏற்பாடுகளை செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai