Enable Javscript for better performance
கல்வீசி தாக்கியதில் சிற்றுந்து கண்ணாடி உடைந்து தாய், மகள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கல்வீசி தாக்கியதில் சிற்றுந்து கண்ணாடி உடைந்து தாய், மகள் காயம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதில் தனியார் சிற்றுந்து (மினி  பேருந்து) கண்ணாடி உடைந்து தாய், மகள் காயமடைந்தனர்.
    மதுரை மாவட்டம் பூசாரிப்பட்டி அருகே பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி(32). இவரது மனைவி ரேகா(30) மற்றும் மகள் அபிநயா(11). இவர்கள் இருவரும் வெளியே சென்று விட்டு  சிற்றுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சிற்றுந்து 
    பட்டணம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத நபர் கற்களை வீசியுள்ளார். அப்போது கண்ணாடி உடைந்து சிதறியதில், சிற்றுந்தில் அமர்ந்திருந்த ரேகா மற்றும் அபிநயா இருவர் மீதும் உடைந்த கண்ணாடி துண்டுகளால் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரேகாவின், கணவர் மாயாண்டி கொடுத்தப் புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார்  வழக்குப்பதிவு செய்து கற்களை வீசிய அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai