Enable Javscript for better performance
சட்டவிரோதமாக மணல் எடுத்த 6 பேர் கைது: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோதமாக மணல் எடுத்த 6 பேர் கைது: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சட்டவிரோதமாக மணல் எடுத்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
      மதுரை தேனூர் மண்டபம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மணல் எடுப்பதாக வண்டியூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தகவல் வந்துள்ளது. இதையடுத்து வண்டியூர் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 4 பேர் மணல் மூட்டைகளுடன் மாட்டு வண்டியில் வந்துள்ளனர். 
      அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் காமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜா (50), ராமசாமி (35), சிம்மக்கல்லைச் சேர்ந்த மணி(59), பெரியசாமி(70) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் அளித்தப் புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகள், 63 மணல் மூட்டைகள், மண் வெட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.மற்றொரு சம்பவத்தில், மதுரை மேலக்கால் பகுதியில் போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது அப்பகுதி வைகை ஆற்றில் 5 பேர், 4 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை பிடிக்க சென்றப்போது 3 பேர் தப்பி விட்டனர். இதில் 2 பேர் மட்டும் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கோச்சடை பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி(26), விஜயக்குமார்(27) என்பதும், சட்டவிரோதமாக மணல் எடுத்ததும் தெரியவந்தது.
     இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். 
      மேலும், மணலுடன் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, தப்பிச் சென்ற மாரி, செல்லையா, செல்வம் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai