Enable Javscript for better performance
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை விழாவில் கடைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை  விழாவில் கடைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு  ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கடைகள் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: மதுரை அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்கு ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி மற்றும் திருவிழாக் காலங்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடக்கும்.
    இந்நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில், கட்டப்பட்ட கடைகள் ஏல அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகின்றன. அந்த கடைகளில் சுவாமி தரிசனத்திற்கு தேவையான பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே ஏல அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
    இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே ஏலம் எடுத்து தற்போது ஏலத்தில் பங்கேற்ற 35 பேர் ஆடி அமாவாசை விழா தொடங்கிய நாள் முதல், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கடைகள் நடத்தலாம். இதற்கானக் கட்டணத்தைக் கோயில் நிர்வாகத்திடம் முறையாகச் செலுத்த வேண்டும். இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே, அடுத்த ஆண்டு கடைகளுக்கு பொது ஏலம் நடைபெறும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai