Enable Javscript for better performance
திருநகரில் ஆசிரியை வீட்டுக் கதவை உடைத்து33 பவுன் நகைகள், ரூ.95 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருநகரில் ஆசிரியை வீட்டுக் கதவை உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.95 ஆயிரம் திருட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநகரில் பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை புதன்கிழமை  திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    திருநகர் மந்தித்தோப்பு 1 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(53). பங்குச் சந்தை முதலீட்டாளர். இவரது மனைவி ராமதிலகம் (45). ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு அஷ்வா, சசிதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். 
    இதில் அஷ்வா கோவையில்  உள்ள பொறியியில் கல்லூரியிலும், இரண்டாவது மகள்  சசிதா திருநகரில் உள்ள பள்ளியிலும்  பிளஸ் 1 வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை காலை ராதாகிருஷ்ணன் வீட்டைப் பூட்டிவிட்டு சோழவந்தான் சென்றாராம். பின்பு மாலை 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்த போது  கதவு உடைக்கப்பட்டிருந்தது. 
    இது தொடர்பாக உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல் துணை ஆணையர் சசிமோகன், உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் வந்து விசாரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேப்ப நாய் வரவழைக்கைப்பட்டது. 
     வீட்டில் அலமாரியில் வைத்திருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.95 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து புகாரின்பேரில்  திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு  செய்து விசாரிக்கின்றனர். 
    திருநகர் பகுதியில் கடந்த சில நாள்களாக பூட்டியிருக்கும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. பட்டப்பகலில் வீட்டின் பூட்டை  உடைத்து திருடிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai