Enable Javscript for better performance
திருமங்கலம் பள்ளியில் ஆசிரியை கொலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் பள்ளியில் ஆசிரியை கொலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

    By DIN  |   Published on : 25th July 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலத்தில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை உளவியல் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  
    திருமங்கலத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ஆசிரியை ரதிதேவியை அவரது கணவர் குருமுனீஸ்வன் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்தார்.  
    இந்த சம்பவத்தால் மாணவர்கள் மனதளவில் பாதிப்பை ஏற்படாமலிருக்க பள்ளிக் கல்விதுறை சார்பில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டது. 
    அதனடிப்படையில் புதன்கிழமை  பள்ளிக் கல்வித்துறையின் நடமாடும் ஆலோசனை மையத்தின் உளவியல் நிபுணர் கார்த்திகேயன் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு "சத்தமில்லாமல் சாதனை படைப்போம்' என்ற தலைப்பில் மன அழுத்தம், சோர்வு, பயம் தளர்ச்சி நீங்கி பயிலவேண்டும் என உளவியல் ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai