Enable Javscript for better performance
திருவாதவூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருவாதவூர் அருகேயுள்ள கட்டையன்பட்டியில் குடிநீர் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கட்டையன்பட்டி சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒருவாரமாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து வேப்படப்பு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருவாதவூர்-திருப்புவனம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த மேலூர் போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai