Enable Javscript for better performance
தேசிய தொழிற் பயிற்சி, பழகுநர் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை இணைய வழியில் சரிபார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய தொழிற் பயிற்சி, பழகுநர் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை இணைய வழியில் சரிபார்ப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 10:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ், தொழில் பழகுநர் சான்றிதழ்களை இணைய வழியில் சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொழில் சான்றிதழும்,  தொழில் பழகுநர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழும் புதுதில்லியில் உள்ள மத்திய பயிற்சித்துறை இயக்குநர் அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.
       இந்த சான்றிதழ்களின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெறும்போது, சான்றிதழ்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று அதற்கான உண்மைத் தன்மை சான்று தபால் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், இணைய வழியில் சான்றிதழ் சரிபார்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
      தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தொழில் பழகுநர் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு தேவையெனில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்  (‌w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai